தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன :
1. கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா? அல்லது அதைக் கடந்து விட்டோமா?
2. தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
3. உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.
சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)